அண்ணா பல்கலைக்கழகம் சான்றிதழ்களுக்கான கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளதை திரும்பபெறு. இந்திய மாணவர் சங்கம் கண்டனம்.
தரம் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்து போனால், புதிய சான்றிதழ் வாங்குவதற்கான கட்டணத்தை ரூ.300-ல் இருந்து ரூ.3,000 ஆக அண்ணா பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ளது. அதோடு பட்டம் பெற்ற சான்றிதழ் தொலைந்துவிட்டால், புதிய சான்றிதழ் பெறுவதற்கான கட்டணமும் ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாவது முறையாக சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ரூ.10,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்படும்.இந்த புதிய கட்டண உயர்வு, இம்மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழம் தெரிவித்துள்ளது.மேலும், 23 வகையான சான்றிதழ்களுக்கு பத்து மடங்கு கட்டண உயர்வை அமல்படுத்தி அண்ணா பல்கலைக்கழகம் திடீரென நடவடிக்கை எடுத்துள்ளது மாணவர்களின் நலன் அவர்களின் பொருளாதார நிலையை கணக்கில் கொள்ளாமல் எடுத்த முடிவாகும். இந்நடவடிக்கையை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
தற்போது கட்டணம் குறைவாக இருப்பதால் தான் அரசு கல்வி நிறுவனங்களில் ஏழை,எளிய கிராமப்புற மாணவர்கள் ஓரளவு கல்வி பெற முடிகிறது. அந்தவாய்ப்பையும் பறிக்கும் விதமாகவே இவ்அறிவிப்பு உள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் உடனே அவ்வறிப்பை ரத்து செய்வதோடு கட்டணமின்றி சான்றிதழ்கள் வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
ஏ.டி.கண்ணன்
மாநிலத்தலைவர்
வீ.மாரியப்பன்
மாநிலச்செயலாளர்
Leave a Review