தனியார் பள்ளிகளில் கட்டாய நன்கொடை கட்டணம்

இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட குழு சார்பாக தனியார் பள்ளிகளில் வசூலிக்க கூடிய கட்டாய நன்கொடை கட்டணம் கொள்ளைகளை தடுத்திட வலியுறுத்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து மனு அளிக்கும் இயக்கம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் அடிப்படையில் பள்ளி கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம், மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளிகள் வசூலித்து வருகின்றன.

குறிப்பாக நாமக்கல் கீரின்பார்க், குறிஞ்சி, இராசிபுரம் வெற்றிவிகாஷ், எஸ்.ஆர்.வீ பாய்ஸ், கேர்ஸ், எஸ்.ஆர்.வி. ஹைடெக், லிட்டில் ஏஞ்சல்ஸ், வித்யவிகாஷ், ஆயில்பட்டி சரஸ்வரி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் CBSE பள்ளிகளும் மாணவர்களின் பெற்றோர்களிடம் வசூலித்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

கட்டாய கல்வி உரிமை சட்டபடி நடைபெற்ற மாணவர் சேர்க்கையில் ஏராளமான முறைகேடுகளில் நடந்துள்ளதாகவும், இக்கட்டாய சேர்க்கை பெற்ற மாணவர்களின் பெற்றோரிடம் கட்டணம் கேட்டு தனியார் பள்ளிகள் மிரட்டி வருகின்றனர்.

மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போதும் கல்வியாண்டு தொடக்கத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு தொடக்க, நடுநிலை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கடிகம் என்ற பெயரில் நன்கொடை வசூலித்து வருகின்றனர்.

குறிப்பாக இராசிபுரம் ஆர்.புதுப்பாளையம் மேல் நிலை பள்ளியில் இது தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.

மேலும் அரசு பள்ளிகளில் வகுப்பறை, கழிவறை, குடிநீர், மின்விளக்கு, மின்விசிறி ஆய்வகங்கள் அதன் உபகரணங்கள் பற்றாக்குறையாக உள்ளது.

குறிப்பாக இராசிபுரம் அத்தனூர் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு என கழிவறை வசதி இல்லை.மற்ற பள்ளிகளில் கழிவறை இருந்தாலும் அதை பூட்டி வைத்து ஆசிரியர்கள் மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது.

குறிப்பாக மங்களபுரம் அனைபாளையம், தாண்டகவுண்டனுர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் சுற்றுசுவர் மற்றும் வகுப்பறையின் தரைதளம் மற்றும் மேற்கூறை ஓடுகள் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது.

இது போன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் இதே நிலை தான் உள்ளன.

மேலும் பல பள்ளிகளின் கழிவறை தண்ணீர் தொட்டி சுகாதாரமற்ற நிலையில் காணபடுகின்றது.

இதனால் மாணவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்கும் அபாயம் உள்ளது.

நமது மாவட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்களை சாதி ரீதியான பாகுபாடுகளோடு நடத்துவதால் மாணவ, மாணவிகள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் ஆசிரியர்கள் மீது பதியப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது .

குறிப்பாக, தண்ணீர் பந்தல் பாளையம் அரசு பள்ளி ஆசிரியயை தெய்வாம்பாள், மாணவன் ரீதுன்னை தாக்கி சாதி ரீதியாக திட்டி வெளியில் நிற்க வைத்துள்ளதால் அவமானத்தால் மரணமடைந்துள்ளார்.

இவ்வழக்கில் ஆசிரியை மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்கு பதித்த பின்னரும் அவர் மீது கல்வி துறை நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மேலும் மாவட்டத்தில் மாணவிகள் மீது தொடர் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து வருகிறது .

குறிப்பாக நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் அறிவியல் ஆசிரியர் ஒருமாணவி மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார்.

எனவே அனைத்து பள்ளிகளிலும் 1098 மற்றும் 1054 என்ற குழந்தைகளுக்கான இலவச உதவி எண்ணை அனைத்து வகுப்பறைகளிலும் மாணவ, மாணவிகள் பார்வையில் படும்படி எழுதிடவும் வைக்க வேண்டும்.

பாலியல் புகார்களை மாணவ- மாணவகள் அச்சமின்றி தெரிவுக்க போக்சோ சட்டபடி உரிய குழுக்களை அனைத்து பள்ளிகளில் அமைத்திடவும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

பாலியல் வன்கொமை மற்றும் சாதிய வன்கொடுமை பாகுபாடுகள் மற்றும் மாணவர்கள் தற்கொலை மரணங்களை தடுத்திட உரிய மன நல உளவியல் ஆலோசனைகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் வழங்கிட வேண்டும்.

மேலும் மாவட்டத்தில் அனைத்து அரசு உதவுபெறும் பள்ளியில் ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து காலிபணியிடங்களை உடனடியாக நிரப்பட வேண்டும் .

மேலும் மாவட்டத்தில் அனைத்து அரசு உதவுபெறும் பள்ளியில் ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து காலிபணியிடங்களை உடனடியாக நிரப்பட வேண்டும் .

என்று இந்திய
மாணவர் சங்கம் நாமக்கல் மாவட்ட குழு சார்பாக கேட்டுகொள்கிறோம்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.டி. கண்ணன், மாவட்ட செயலாளர் தே. சரவணன் மாவட்ட தலைவர் எம் தேன்மொழி, மாவட்ட குழு உறுப்பினர் கோகுல் மற்றும்
தண்ணீர்பந்தல் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வன்கொடுமையால் மரணமடைந்த மாணவனின் தந்தை பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்ச்சியாக நேரடியாக பலமுறை வந்து சந்திக்க முடியவில்லை தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அழைப்புகளை எடுப்பதில்லை.

ஆகவே மாவட்டம் முழுவதும் வரக்கூடிய கல்வி பிரச்சனைகள் தொடர்பாக புகார் அளிக்க முடியவில்லை.

அளிக்கப்பட்ட புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று மாணவர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.

வேறு வழியின்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் மேல்நிலை பள்ளிகள் உதவியாளர் மணிவண்ணனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

மேற்கண்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருகின்ற ஜூன் 22ஆம் தேதி காலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

SFI Tamilnadu
The Students Federation of India The Students Federation of India (abbreviated as SFI) , The SFI is India’s largest student organisation with more than 4.3 million alleged members. Currently, A.T.Kannan and V.Mariappan are elected as the Tamil Nādu State President and Secretary respectively. The SFI Tamil Nādu has more than 3 Lakhs Members